வடக்கில் காணப்படுகின்ற பிரச்சினை களை ஆராய்வதற்கும் தீர்ப்பதற்குமென கிளி நொச்சியில் பிரதமர் அலுவலகம் அமைக்கப் படவுள்ளது. இங்குள்ள நிலைமைகள் தொட ர்பில் ஆராய்ந்து ஆலோசனை வழங்குவதற்காக விசேட பிரதிநிதியொருவரும் நியமிக்கப்படவுள்ளார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் விசேட வேலைத் திட்டங்களை மேற்கொண்டு மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றவுள்ளதா கவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
வட பகுதிக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க நேற்றையதினம் கிளிநொச்சிக்கு சென்றார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மீள்குடியேற்றம்,பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் அபிவிருத்தி,புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு செயற்றிட்டம், மற்றும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
குறிப்பாக மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றப்படாத நிலைமை, காணி உறுதிப்பத்திரங்கள் இன்மையால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வீட்டுத்திட்டங்கள் கிடைக்கப்பெறாமை, விவசாய நிலங்கள் விடுவிக்கப்படடாமை, மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார வசதிகள், புணர்வாழ்வு அழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் சமுகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள், உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் வாழ்வாதார உதவிகள் தொடர்பாக கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.
இவற்றைக் கவனத்திற் கொண்டரணில் விக்கிரமசிங்க அவை தொடர்பாக தீர்வை எட்டுவது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.