கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக சட்ட விரோதமாக தங்கம் கட த்த முற்பட்ட இரு இந்தியர் கள் உள்ளிட்ட ஐவர் விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 9.00 மணியு டன் நிறைவடைந்த 24 மணி நேரத்துக்குள் வெவ்வேறு சந்தர்ப் பங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இவர்களிடமிருந்து 255 இலட்சத்து 9 ஆயிரத்து 150 ரூபா பெறுமதியான 5250 கிராம் பெறுமதியான தங்கம் மீட்கப்பட்டதாக வும் சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். அத்துடன் வெவ்வேறான மூன்று சம்பவங்களிலேயே இந்த தங்கம் கைப்பற்றப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர் ஒரு சம்பவத்தில் உதவி சுங்க அத்தியட்சர் ஒருவர் ஒத்தாசை வழங்கியுள்ளதாகவும் அவரையும் சுங்க மத்திய விசாரணைப் பிரிவு விசாரணை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் காலை டுபாயில் இருந்து யூ.எல்.226 என்ற விமானத்தில் வந்த கல்முனையை சேர்ந்த 29 வயதான நபர் ஒருவர் விமான நிலையத்தில் கடமையில் இருந்த உதவி சுங்க அத்தியட்சர் ஒருவரின் உதவியுடன் 133 இலட்சத்து 59 ஆயிரத்து 150 ரூபா பெறுமதியான 2968.7 கிராம் பெறுமதியான தங்கத்தினை நாட்டுக்குள் கடத்த முற்பட்டுள்ளார்.
குறித்ததங்கத் தொகையினை உதவி சுங்க அத்தியட்சரின் காலணிக்குள் மறைத்து விமான நிலையத்துக்கு வெளியே கடத்திவரும் விதமாக சூட்சுமமாக திட்டமிடப்பட்டுள்ளது. இதன் போது ஒரு கட்டத்தில் அந்த அதிகாரி கால் இடறி விழவே அவரது காலுறைக்குள் இருந்த தங்கம் வெளிப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த அதிகாரியை கைது செய்த சுங்கப் பிரிவினர் அந்த தங்கத்தினை டுபாயில் இருந்து கடத்தி வந்த கல்முனையை சேர்ந்த 29 வயதுடைய நபரையும் கைது செய்தனர்.
இவர்கள் மீதான விசாரணைகளை மத்திய சுங்க விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். நேற்று நண்பகல் வரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பலனாக இன்று பெரும்பாலும் கடத்தலுக்கு உதவிய சுங்க அதிகாரி பணி நீக்கம் செய்யப்படலாம் என சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி குறிப்பிட்டார்.
இது தவிர நேற்று முன் தினம் இரவு 9.10 மணியளவில் சிங்கப் பூரில் இருந்து யூ.எல்.309 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 23 மற்றும் 27 வயதுகளை உடைய இரு இந்தியர்களிடம் இருந்து 50 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் மீட்கப்பட்டுள்ளது. மல வாயிலில் மறைத்து வைத்து இவர்கள் இந்த தங்கத்தினை கடத்த முற்பட்டிருந்தனர்.
ஒருவர் 30 இலட்சம் ரூபா பெறுமதியிலான 6 தங்க பிஸ்கட்டுக்களை மறைத்து வைத்திருந்துள்ளதுடன் மற்றையவர் 20 இலட்சம் ரூபா பெறுமதியிலான 4 தங்க பிஸ்கட்டுக்களை இவ்வாறு மறைத்து கடத்த முயன்றுள்ளனர். இவற்றின் நிறை சுமார் ஒரு கிலோகிராம் என குறிப்பிடும் சுங்கப் பிரிவினர் விசாரணைகளை தொடர்கின்றனர்.
இதேவேளை முழுமையாக பூர்த்தியாகாத தங்க நகைகளை அணிந்து தங்கத்தினை இந்தியாவின் பெங்களூருக்கு கடத்த முயன்ற 39 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவரையும் நேற்று சுங்கப் பிரிவினர் கைது செய்தனர். குளியாபிட்டி பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் விமான நிலையத்தின் இருதி வாயிலில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டு சுங்கப் பிரிவினரிடம் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.
அவர் தனது சாரிக்குள் மறைத்து வைத்திருந்த தங்கச் சங்கிலி ஒன்று, மேலும் இரு ஆபரணங்கள் என 1281.25 கிராம் நிறையுடைய 61 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி குறிப்பிட்டார். யூ.எல்.173 என்ற விமானத்தில் நேற்ரு அதிகாலை 4.00 மணியளவில் அவர் இவ்வாறு பெங்களூர் செல்ல தயாராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் விஷேட விசாரணைகளை கட்டுநாயக்க சுங்க விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.