மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலிய ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.
இதேவேளை, நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் தப்போவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டது.