5ஆவது முறையாக உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியா வசம்!

0
170

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த 11 வது உலகக் கிண்ணத்தை சொந்த மண்ணில் கைப்பற்றி வரலாறு படைத் தது அவுஸ்திரேலிய அணி. அந்த அணிக்கு கிண்ணத்துடன் 3,975.000 அமெரிக்க டொலர் பரிசாக வழங்கப்பட்டது.

உலக கிண்ண திருவிழா நேற்று கோலாகல மாக வானவேடிக்கைகளுடன் நிறைவு பெற்றது.

இதேவேளை 12 வது உலக கிண்ணம் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இடம்பெறும்.

அவுஸ்திரேலிய அணி 33.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை பெற்று 7 விக்கெட்டால் வெற்றிபெற்றது.

அவுஸ்திரேலிய அணி 7 தடவையாக உலக கிண்ண இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று 5 வது தடவையாக கிண்ணத்தை கைப்பற்றி யது குறிப்பிடத்தக்கது.

தனது இறுதிப்போட்டியில் கிளார்க் 74 ஓட்டங் களைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

184 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என பதிலெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக ஆரேன் பின்ச்-டேவிட் வோனர் களமிங்கினர். ஆரென் பின்ச் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்து செல்ல வோனருடன் இணைந்தார் ஸ்மித். இருவரும் அணியை வெற்றிப் பாதைக்கு இட் டுச் சென்ற வேளை வோனர் 45 ஓட்டங்க ளுக்கு ஆட்டமிழந்து சென்றார்.
பின்னர் அணித் தலைவர் கிளார்க் ஸ்மித்துடன் இணைந்து கொண்டு இருவரும் நிதானமாகவும் சிறப்பாக வும் ஆடி மூன்றாவது விக்கெட்டுக்காக 112 ஓட்டங்கள் பெற்றிருந்தவேளை 74 ஓட்டங் களுக்கு கிளார்க் ஆட்டமிழந்தார்.

பின்னர் ஸ்மித்துடன் இணைந்தார்  வொட்சன். ஸ்மித் 56 ஓட்டங்களையும் வொட் சன் 2 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற் றனர். பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார் பாக ஹென்ரி 2 விக்கெட்டையும் டரன்ட் போல்ட் ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இறு திப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணித் தலைவர் பிரண்டன் மெக்கலம் தனது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். அதற்கு அமைய ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக மெக்கலம், மார்டின் கப்டில் களமிறங்கினர். போட்டி தொடங் கிய சில நிமிடங்களில் அணித்தலைவர் மெக் கலம் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் கப்டிலுடன் இணைந் தார் கேன் வில்லியம்ஸன்.

உலக கிண்ண வரலாற்றில் முதன்முறை யாக உலக கிண்ண இறுதிப்போட்டிக்கு தெரி வானது நியூசிலாந்து அணி.

இந்த இறுதிப் போட்டிக்கு இலங்கையைச் சேர்ந்த கள நடுவராக குமார் தர்மசேனவும் போட்டி மத்தியஸ்தராக ரஞ்சன் மடுக்கல்ல ஆகியோர் கடமையாற்றினர்

ஓரளவுக்கு ஆடிக்கொண்டிருந்த கப்டில் 15 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். கப் டில் உலகக் கிண்ண போட்டி ஒன்றில் 237 ஓட்டங்கள் பெற்று சாதனை படைத்திருந் தமை குறிப்பிடத்தக்கது.

வில்லியம்ஸனுடன் ஜோடி சேர்ந்தார் ரோஸ் டைலர். வில் லியம்ஸன் 12 ஓட்டங்கள் பெற்று ஆடுகளம் திரும்பினார். பின்னர் ரோஸ் டைலருடன் இணைந் தார் கிரன்ட் எலியட். சிறப்பாக அணியை ஓட்டங்கள் பெற வழியேற்படுத்திய ரோஸ் டைலர் 40 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். இரு வரும் இணைந்து 4வது விக்கெட்டுக்காக 111 ஒட் டங்களைப் பெற்றுக் கொண்ட னர். பின்னர் எலியட்டுன் இணைந்த கோரி அண்டர்ஸன் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்து சென் றார். பின்னர் ஆறாவது விக்கெட்டுக்காக இணைந் தார் லுக் ரொன்ஜp. அவரும் சிறப்பாக ஆடு வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஓட்டம் எதுவும் பெறாமல் வெளியேறினார். பின்னர் நிய+சிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் டேனியல் விட்டோரி எலியட்டுடன் ஜோடி சேர்ந்து ஆடினார்.

நேற்யை போட்டியில் மெல்பேர்ன் மைதா னத்தில் 93,013 பார்வையாளர்கள் போட்டியை கண்டுகளிக்க வருகை தந்திருந்தனர். இதன் மூலம் உலகக் கிண்ணப்போட்டியின் இறுதிப் போட்டியில் அதிகளவான ரசிகர்கள் பார்வை யிட்ட மைதானம் என்ற சாதனையை மெல் பேர்ன் மைதானம் நிலைநாட்டியது. அத்துடன் மெல்பேர்ன் மைதானத்தில் 92ம் ஆண்டு நடை பெற்ற இறுதிப்போட்டியில் 87 182 பார்வையா ளர்கள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த மைதானத்தில் ஆ’ஸ் 2013 ம் ஆண்டு டெஸ்ட் தொடரின் போது 91,112 பேர் கண்டுகளித் தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த மைதா னத்தில் ஒரு இலட்சம் இருக்கைகள் இருப் பது குறிப்பிடத்தக்கது.

இந்த உலகக் கிண்ண இறுதிப்போட்டியுடன் சர்வதேச ஓரு நாள் போட்டிக்கு முழுக்கு போடுவதாக கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விட்டோரி அறிவித்தார்.

விட்டோரி 9 ஓட்டங்களை பெற்றபோது ஆட்டமிழந்து சென்றார். பின்னர் எலியட்டு டன் டிம் சவுத்தி ஜோடி சேர்ந்தார். நியூசி லாந்து அணிக்கு தடுப்பு சுவராக நின்ற கிரான்ட் எலியட் 83 ஓட்டங்கள் பெற்று ஓட்ட எண்ணிக் கையை தனியாளாக நின்று அதிகரித்தமை விசேட அம்சமாகும்.

பின்னர் சவுத்தியுடன் இணைந்தார் ஹென்ரி அவர் ஓட்டம் எதுவும் பெறாமல் வெளியேறி னார். பின்னர் சவுத்தியுடன் இணைந்தார் டரன்ட் போல்ட், சவுத்தி 11 ஓட்டங்கள் பெற்றி ருந்த போது ரன் அவுட் முறையில் ஆட்ட மிழந்தார். நிய+சிலாந்து அணி 45 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 183 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றது.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார் பாக போல்க்னர், ஜோன்ஸன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஸ்டாக் 2 விக்கெட்டை யும் மெக்ஸ்வெல் ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

இரண்டு அணிகளும் 126 போட்டிகளில் ஆடி அவுஸ்திரேலியா 85 போட்டிகளிலும் நியூசி லாந்து 35 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள் ளமை குறிப்பிடத்தக்கது. 6 போட்டி எந்த முடிவையும் இரு அணியும் பெறவில்லை.

அவுஸ்திரேலியா -நிய+சிலாந்து அணிகள் 11வது உலகக் கிண்ண கிரிக்கெட் போட் டியை இணைந்து நடத்தியமை குறிப்பிடத்தக் கது. இரு அணிகளும் 1992 ம் ஆண்டு நடத்திய உலக கிண்ணப் போட்டியில் இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தெரிவாக வில்லை. ஆனால் இம்முறை போட்டியை நடத் திய நாடு என்ற வகையில் இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகி ஈற்றில் ஆஸி. அணி கிண்ணத்தை கைப்பற்றியது.

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் கிளார்க் கிண்ணத்தை வென்று கொடுத்து தனது ஓய்வை அணிவித்தார். இவரை இரு நாட்டு அணி வீரர்கள். இரு நாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி ஆர வாரத்துடன் பிரியாவிடை வழங்கி வைத் ததை இங்கு காணக்கூடியதாக இருந்தது.

245 ஒருநாள் போட்டிகளில் விளையாடி யுள்ள கிளார்க் 7,981 ஓட்டங்களை 45.03 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இதில் 8 சதங்களும் 58 அரைச்சதங்களும் அடங்கும்.

74 போட்டிகளில் கிளார்க்கின் தலைமைத் துவத்தில் அவுஸ்திரேலியா 50 போட்டிகளில் வென்றுள்ளது.

ஆறு வாரங்கள், 49 போட்டிகள் மற்றும் 14 நாடுகள் என்று இம்முறை உலகக் கிண் ணம் முடிவுக்கு வந்தது.

அவுஸ்திரேலிய அணியின் விக்கெட் காப்பா ளர் பிராட் ஹடின் இந்த உலக கிண்ண போட் டியில் 8 போட்டிகளில் ஆடி 16 பிடியெடுப்பு களை எடுத்து முதலிடத்திலும் நியூசிலாந்து அணியின் கப்டில் 547 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியின் சங்கக்காரவை இரண்டா மிடத்துக்கு பின்தள்ளினார். பந்து வீச்சில் முத லாமிடத்தை ஆஸி அணியின் ஸ்டாக் பெற் றுக் கொண்டார்.

இந்த உலக கிண்ண போட்டியில் இலங் கையின் சங்கக்கார, மஹேல ஜயவர்தனவும் சிம்பாப்வேயின் பிரன்டன் டைலர், நியூசிலாந் தின் விட்டோரி, பாகிஸ்தான் அணியின் தலை வர் மிஸ்பா உல் ஹக், ‘ஹிட் அப்ரிடி மற்றும் ஆஸி. அணித் தலைவர் கிளார்க் ஆகி யோர் ஒரு நாள் போட்டிக்கு பிரியாவிடை கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இறுப் போட்டியின் நாயகனாக ஜேம்ஸ் போல்க்னர் தெரிவானார். தொடரின் நாயகனாக மிச்சல் ஸ்டாக் தெரிவானார்.

உலக கிண்ணத்துடன் ஆஸி. அணியினர் 6 வாரங்கள் நாடு பூராகவும் வலம் வரவுள்ளனர்.

mainpic_L world cup 2 world cup 3 world cup 4


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here