வவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் ஏற்றி வந்த குளிரூட்டப்பட்ட ஹன்டர் ரக வாகனம் வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
புளியங்குளம் எரிபொருள்நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் நெல்லு வெட்டும் இயந்திரத்தை ஏற்றிய நிலையில் உழவியந்திரம் தரித்து நின்றது. கொழும்பிலிருந்து யாழப்பாணம் நோக்கி வந்த தண்ணீர் ஏற்றிய ஹன்டர் ரக வாகனம் மோதியது.
விபத்தில் ஹன்டர் வாகனத்தில் பயணித்த யாழ்பாணம் வடமராட்சி சேர்ந்த மரியதாஸ் நிறோசன் உயிரிழந்தார். அத்துடன் மற்றொரு இளைஞனான செ.அயந்தன் என்பவரின் கை ஒன்று துண்டிக்கபட்டுள்ளது என்று வைத்தியசாலைத் தகவல் தெரிவித்தது.
உழவியந்திரத்தில் இருந்த இளைஞன் படுகாயமடைந்ததுடன் மற்றுமொருவர் சிறு காயங்களிற்கு உள்ளாகியுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.