யாழில் குடும்பப் பெண் அடித்துக்கொலை ; மூவருக்கு விளக்கமறியல்!

0
148

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று பேரை எதிர் வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

 

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் குடும்பப்பெண் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

வீட்டுக்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று மகனைத் தாக்க முற்பட்ட போது, அதனைத் தடுக்க முற்பட்ட தாயார் பொல்லு மற்றும் கம்பியால் தலையில் தாக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

சம்பவத்தில் 58 வயதான சந்திரராசா விஜயகுமாரி  என்ற குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டதோடு அவரது மகன் காயமடைந்தார்.

இந்நிலையில் அந்தக் கொலையுடன் தொடர்புடைய மூவர் நேற்றுத் திங்கட்கிழமை அதிகாலை கோப்பாய் பொலிஸில் சரணடைந்தனர். எனினும் அவர்கள் மூவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

 

சந்தேகநபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்கிழமை முற்படுத்தப்பட்ட போது. அவர்களை எதிர் வரும் வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

 

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மூவர் தொடர்பான தகவலை பொலிஸார் நீதிமன்றில் தெரிவிக்கவில்லை. அத்துடன், பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட முதல் அறிக்கையிலும் மூன்று சந்தேகநபர்கள் தொடர்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here