கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை விசேட மாவட்டங்களாக கருதி அப்பகுதி மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கு நடவடிக்கை எடுக்க கூட்டு அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
யாழ். கச்சேரியில் இடம்பெற்ற வட மாகாண அதிபர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுடன் இணைந்து இந்த கூட்டு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வட மாகாணத்திலே கல்வி நடவடிக்கைகளில் வீழ்ச்சி காணப்படுவதாகவும் கொழும்பு மாவட்டத்தோடு ஒப்பிடும் போது ஒரு போட்டித்தன்மை அற்றுக்காணப்படுவதாகவும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கல்வி நடவடிக்கைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி, பாடசாலைகளுக்கு தேவையான வளங்களை அதிகரிக்கச் செய்து, கல்வியின் தரத்தை முன்னேற்ற நடவடிக்ககைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் சகல தரப்பினரிடமும் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.