மஹிந்த விதித்த புலம்பெயர் அமைப்பு மீதான தடையை நீக்க மைத்திரி அரசு முடிவு: மங்கள சமரவீர!

0
115

mankalaமஹிந்த அரசாங்கம் புலம்பெயர் அமைப்புக்கள் மற் றும் சில நபர்கள் மீது விதித்திருந்த தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் 424 நபர்கள் மீதான தடையை நீக்குவதற்கு மைத்திரிபால அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் இது தொடர்பிலான அறிவிப்பொன்றை அண்மையில் பாராளுமன்ற அமர்வின் போதும் தெரிவித்திருந்தார். நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் பரவுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இதனாலேயே குறித்த புலம்பெயர் அமைப்புக்களுக்கு கடந்த கால அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் அரசாங்கத்தின் தவறான நிலைப்பாட்டை நீக்குவதென தீர்மானித்து தற்போதைய அரசாங்கம் அதுமாதிரியான ஒரு தீர்மானத்தை எட்டியுள்ளது. இதன் அடிப்படையிலேயே குறித்த புலம்பெயர் மற்றும் நபர்கள் மீதான தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here