பிரான்சில் 2ஆம் லெப்டினன் மாலதியின் 31 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் பரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான நந்தியார் பகுதியில் அமைந்துள்ள மண்டபத்தில் கடந்த 13.10.2018 சனிக்கிழமை மாலை 15.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றன.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழ்பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை நந்தியார் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. சாந்திக்குமார் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரினை 26.06.1989 அன்று ஓமந்தைப் பகுதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் ரூபன் அவர்களின் சகோதரர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
அரங்க நிகழ்வுகளாக கவிதை, பேச்சு, எழுச்சிப்பாடல், எழுச்சி நடனம், மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு துணைப் பொறுப்பாளர் திரு.சுரேஸ் அவர்களின் சிறப்பு உரை என்பன இடம்பெற்றன. திரு. சுரேஸ் அவர்கள் தனதுரையில் மாலதி அவர்களின் தியாகம் பற்றியும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாலதி அவர்களின் வீரச்சாவென்பது மறக்கமுடியதா ஒரு விடயம். இந்திய இராணுவம் தமிழீத்தில் கால் வைத்த போது, அந்தக் காலப் பகுதியில் இந்திய இராணுவத்தினரை முகாம்களை விட்டு வெளியேவராமல் தடுப்பதற்கு இடம்பெற்ற மக்களின் போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை என்பதாக அவருடைய உரை தொடர்ந்தது.
இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடலுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு )