திருச்சியில் இருந்து துபாய் சென்ற எயார் இந்தியா விமானம் கட்டுப்பாட்டு கோபுரத்தின் மீது மோதியது. இது எப்படி என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
நேற்று அதிகாலை 1.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. திருச்சியில் இருந்து அந்த எயார் இந்தியா விமானம் துபாய் நோக்கி சென்றுள்ளது. இந்த விமானம் விமான நிலையத்தின் முடிவில் உள்ள கட்டுப்பாட்டு கோபுரம் மீது மோதி உள்ளது.
உள்ளே 130 பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் இருந்துள்ளனர். இதனால் நிலைதடுமாறி கொஞ்சம் சுற்று சுவரில் இடித்துள்ளது.
அதன்பின் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மும்பையில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. உள்ளே இருந்த 130 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர்.
இவர்கள் வேறு விமானம் மூலம் துபாய்க்கு அனுப்பப்பட இருக்கிறார்கள் என்று தொிவிக்கப்பட்டது. ஆனால் இது எப்படி நடந்தது என்று தெரியாமல் அதிகாரிகள் இன்னும் குழம்பி உள்ளார்கள்.
மூன்று முறை அதிகாரிகள் இந்த விபத்து நடந்த இடத்தை சோதனை செய்துவிட்டனர்.
ஆனாலும் எதனால் விமானம் சம்பந்தம் இல்லாமல் கட்டுப்பாட்டு டவரின் மீது மோத வேண்டும். எப்படி விமானம் அவ்வளவு நெருக்கமாக சென்றது என்று சோதனை செய்து வருகிறார்கள்.
அதேபோல் விமானம், கட்டுப்பாட்டு கோபுரத்தில் இடிக்கும் அளவிற்கு எப்படி தாழ்வாக சென்றது என்றும் சோதனை செய்து வருகிறார்கள்.
திருச்சி விமான நிலையை ஓடு பாதை போதிய நீளம் கொண்டதுதான்.
ஆனாலும் கூட எப்படி இந்த சம்பவம் நடந்தது என்று தெரியாமல் குழம்பி போய் இருக்கிறார்கள்.
இந்த டவர் ஏடிசி டவர் என்று அழைக்கப்படும் ஏர் டிராபிக் கொண்ட்ரோல் எனப்படும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் ஆகும்.
இதை வைத்துதான் விமான போக்குவரத்து நெரிசலை ஒவ்வொரு விமான நிலையத்திலும் சமாளிப்பார்கள்.
எந்த விமானம் எப்போது புறப்பட வேண்டும், எது எப்போது உள்ளே வர வேண்டும் என்று தீர்மானிப்பார்கள். இதில்தான் அந்த விமானம் மோதியுள்ளது.