தாக்குதல் சம்பவம் ஒன்றுக்கு இலக்காகி கொழும்பில் சிகிச்சை பெற்று வந்த ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன சிகிச்சை பலனளிக்காமையினால் நேற்றுச் சனிக்கிழமை அதிகாலை 3.50 மணிக்கு மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
அவரது பின் தலையில் மூளைக் குள் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதா கவும். இயந்திர உதவியுடனேயே அவர் சுவாசித்துக் கொண்டிருப்பதா கவும் வைத்தியசாலை வட்டாரங்கள் முன்னர் தெரிவித்திருந்தன. இந்நிலை யிலேயே அவர் உயிரிழந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு 7.00 மணியளவில் பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் பிரியந்த சிறிசேன, பின் தலைப் பகுதியில் வெட் டப்பட்டு படுகாயமடைந்தார். காயமடைந்த பிரியந்த சிறிசேன பொலனறுவை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் முதலில் அனுமதிக்கப்பட்டு. பின்பு கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பிலுள்ள முன்னணி தனியார் வைத்தியசாலையில் வைத்தே மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான பிரியந்த சிறிசேனவின் (வயது 43) இறுதிச் சடங்கு நாளை 30 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு பொலன்னறுவை பொது மயானத்தில் இடம்பெறும்.
அவருடைய பூதவுடல், எத்துகல்பிட்டியவில் உள்ள அன்னாரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தனது நண்பரொருவரினால் கடந்த 26 ஆம் திகதி கோடாரி தாக்குதலுக்கு இலக்கான இவர் நேற்று சனிக்கிழமை அதிகாலை மரணமடைந்தார். இவர், மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
1972 ஆம் ஆண்டு டிசெம்பர் 12 ஆம் திகதி பொலன்னறுவையில் பிறந்த இவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குடும்பத்தில் இளைய சகோதரராவார்.
பொலன்னறுவை லக்ஷ உயன கனிஷ்ட வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை பயின்ற இவர், கம்பஹா உடபில மகா வித்தியாலயத்தில் சாதாரண தரம் வரையிலும், கம்பஹா கலஹிடியாவ மத்திய மகா வித்தியாலயம் மற்றும் பொலன்னறுவை நொபாவெள மகா வித்தியாலயம் ஆகியவற்றில் உயர்தரம் பயின்றுள்ளார்.
பொலன்னறுவை ரஜரட்ட பில்டர்ஸ் மற்றும் சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ரஜரட்ட ஹால் தனியார் நிறுவனம் ஆகியவற்றின் உரிமையாளராவார்.
வர்த்தகத் துறையில் பிரபலமாக பேசப்படும் ஒருவரான இவர் சமூக சேவையாளர் மட்டுமன்றி ஒரு கொடையாளியாவார்.