யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி மேற்கொண்டுவரும் நடை பவனி இன்று மூன்றாவது நாளாக தொடரவுள்ளது.
அனுராதபுர சிறைச்சாலை மற்றும் கொழும்பு – மகசின் சிறைச்சாலை என்பனவற்றில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் செவ்வாய்க்கிழமை நடைபவனி ஒன்றை ஆரம்பித்தனர்.
யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த இந்த நடைபவனி அனுராதபுர சிறைச்சாலை நோக்கி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பித்த நடைபவனியில் பங்கேற்ற மாணவர்கள், இரவு இயக்கச்சியை வந்தடைந்தனர்.
அங்கு தங்கி விட்டு, நேற்று முன்தினம் காலை மீண்டும் நடைபவனியை ஆரம்பித்த மாணவர்கள் கிளிநொச்சியை நண்பகல் கடந்து சென்றனர்.
நேற்று மூன்றாவது நாளாக இடம்பெற்ற இந்த நடைபவனிக்கு, பொது அமைப்புகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் ஆதரவளித்து வருகின்றனர்.