இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுடைய 54 கோடி இந்திய ரூபா மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு உள்நாட்டிலும் வௌிநாட்டிலும் உள்ள சொத்துக்களே முடக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்திற்காக இலஞ்சம் பெற்றுக்கொண்டு தேவையான ஆவணங்களை தயார் செய்து கொடுத்ததாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இலஞ்சப்பணம் மொரீஷியஸ் நாட்டில் இருந்து கிடைக்கப்பெற்றமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.