
சபை இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.
வல்வெட்டித்துறை நகரசபையின் மாதாந்த கூட்டம் நேற்று புதன்கிழமை முற்பகல் நகரசபை மண்டபத்தில் தவி சாளர் தலைமையில் நடைபெற்றது.
இதில் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்கைகளிற்கு நினைவு தூபி முதலில் அமைக்க வேண்டும் என்பதும் பின்னர் பொதுத் தூபி அமைப்பது எனவும் தீர்மானிக்கப் பட்டது.
ஆனால் பொதுத் தூபியினையும் சேர்த்து அமைக்க வேண்டும் என சில உறுப்பினர்கள் விடாப்பிடியாக நின்றனர். இதனால் நகரசபை கூட்டம் பெரும் அல்லோலகல்லோலப்பட்டது.
இறுதியில் சபையினை தவிசாளர் நடத்த முடியாத நிலை ஏற்பட அவர் சபையை விட்டு வெளியேறினார். இத னையடுத்து சபை இன்று வியாழக் கிழமை வரை ஒத்திவைக்கப்படுவதாக செயலாளர் அறிவித்தார்.