மகிந்தவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி  6ம் திகதி!

0
875

140 மில்லியன் ரூபா நட்டத்தை மீளப் பெற்றுத் தருமாறு கோரி இலங்கை போக்குவரத்துச் சபையால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி  6ம் திகதி பதில் வழங்குவதற்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று  வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க முன் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களை பயன்படுத்தியதன் மூலம் ஏற்பட்ட நட்டத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை போக்குவரத்துச் சபையால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here