வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் பலமடைவு; மழை தொடரும்!

0
404

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கமானது மேலும் பலமடைந்து ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடைந்துள்ளதால் இன்றும் (09) நாளையும் (10) மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கமானது, திருகோணமலைக்கு 950 கி.மீ தூரத்தில், வட அகலாங்கு 14.7 மற்றும் கிழக்கு நெடுங்கோடு 87.30 களுக்கு (14.7N, 87.3E) அருகில் நிலை கொண்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் தாக்கம் காரணமாக, நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றும் நாளையும் மேலும் அதிகரிக்குமெனவும், நாட்டின் தென்மேல் பகுதியில் பலத்த மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல், வடமேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும்; காலி, மாத்தறை, மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மாகாணத்தில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் மேல், தென், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here