அனுராதபுரம் நோக்கிய பல்கலை மாணவர்களின் நடைபவனி போராட்டம் ஆரம்பம்!

0
664

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி நடைபவனியை ஆரம்பித்து உள்ளனர். யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் குறித்த நடைபயணத்தை ஆரம்பித்து உள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தலைவர் கிருஷ்ணமேனன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணியில் மாணவர்கள் அரசியல் வாதிகள் பொது மக்கள் எனப் பலரும் இணைந்து கொண்டுள்ளனர்
இதனைத் தொடர்ந்து இப் பேரணியில் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி மற்றும் வவுனியா வளாக மாணவர்களும் இணைந்து கொள்ளவுள்ளனர்.
குறித்த நடைப்பவனிக்கு பொதுமக்கள் மற்றும் அமைப்புக்களின் ஆதரவினை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய், அரசியல் கைதிகளின் விவகாரம் ஓர் சட்ட விவகாரம் அல்ல அது ஓர் அரசியல் விவகாரம். எனவே அரசியல் கைதிகளின் அரசியலை பயங்கரவாதமாக பார்க்குமோர் சட்டக்கட்டமைப்புக்குள் நின்று அதை சட்ட விவகாரமாக அணுக கூடாது. மாறாக அதனை அரசியல் விவகாரமாகவே அணுக வேண்டும். இது தொடர்பில் அரசாங்கம் ஓர் அரசியல் தீர்மானத்தை எடுத்து கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும். என கோரியே நடைபவனியை மேற்கொண்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here