முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த ஏழாயிரத்து 750.75 ஏக்கர் காணிகளில் இதுவரை 4859 ஏக்கர் வரையான காணிகளே விடுவிக்கப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலகத் தகவல் மூலம் அறியமுடிந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த பல ஆயிரம் ஏக்கர் நிலங்களிலிருந்து 1983 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஏற்பட்ட வன்முறைகளால் அவர்கள் அந்த நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
யுத்தம் நிறைவு பெற்று மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்ற போதும், தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக நிலங்கள் பல இதுவரை விடுவிக்கப்படவில்லை.
குறிப்பாக, இந்த மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் தொல்பொருள் திணைக்களம் என்பன காணிகளை தொடர்ந்து சுவீகரித்து வருகின்றன.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா தவிர்ந்த ஏனைய ஐந்து பிரதேச செயலர் பிரிவுகளிலும் உள்ள ஏழாயிரத்து 750.75 ஏக்கர் காணி படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் இதுவரை நான்காயிரத்து 859 ஏக்கர் மாத்திரமே விடுவிக்கப்பட்டிருக்கின்றது.
இதுதொடர்பில் மாவட்டச் செயலகத் தகவல்களின் படி கரைதுரைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் நான்காயிரத்து 45 ஏக்கரும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவில் 169 ஏக்கரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 186 ஏக்கரும் துணுக்காய் பிரதேசசெயலர் பிரிவில் 429 ஏக்கரும் மாந்தை கிழக்குப்பிரதேச செயலர் பிரிவில் 30 ஏக்கர் நிலப்பரப்பும் என நான்காயிரத்து 859 ஏக்கர் படையினர் வசம் இருப்பதாக மாவட்டச் செயலகத்தவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கரைதுரைப்பற்று பிரதேசசெயலர் பிரிவில் விமானப்படையினர் மற்றும் இராணுவத்தினர் வசமுள்ள கேப்பாப்புலவு கடற்படையினர் வசமுள்ள 617 ஏக்கர் முள்ளிவாய்க்கால் கோத்தபாய கடற்படை முகாம் என்பன அதிகளவு காணிகளாக காணப்படுகின்றமை.