உறவுகளைத் தேடி அலைந்த எமக்கு ஜனாதிபதி சர்வதேசத்திடம் கூறியதை ஏற்க முடியாது”

0
297
காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் ஏக்கங்களுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் கண்ணீருடனும் தந்தை, சகோதரர்கள் என உறவு களை தேடி அலைந்து கொண்டிருக் கையில் ஜனாதிபதியின் கூற்றை ஏற்க முடியாது அவர் குற்றவாளிகளை காப்பாற்றும் விதமாக முயன்றுள்ளாா்.

இலங்கைத் தமிழரின் நிலை உணரப்பட்டு சர்வதேசத்தின் நேரடியான விஜயம், அழுத் தம், நேரடிக் கண்காணிப்பின் ஊடாக தமிழ் மக்களது நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர் வுகளைத் தேடி வழங்க வேண்டுமென வலி யுறுத்துவதாக வலிந்து காணாமல் ஆக்கப் பட்டோர் அமைப்பின் தலைவி அமலநாயகி அமலராஜ் தெரிவித்துள்ளாா்.

மேலும் கூறியுள்ளதாவது,

ஜனாதிபதி சர்வதேசம் சென்று எமது நாட்டுப் பிரச்சினையை உள்ளக பொறி முறையின் ஊடாகவே தீர்த்துக் கொள்வோம் சர்வதேசம் வந்து தலையிட தேவையில்லையெனத் தெரிவித்துள்ளாா்.

ஜனாதிபதிக்கு சர்வதேசம் கொடுத்த கால அவகாசம் முடிவுற்ற நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது வரைக்கும் எந்தவொரு தீர்வையும் அவர் வழங்க வில்லை. எந்தவொரு முடிவுக்கும் அவர் வரவில்லை.

எங்களுக்கு நீதி கிடைக்காத நிலையில் அவர் இவ்வாறு கூறி குற்றவாளிகளை காப்பாற்றும் விதமாக செயற்படுகிறார். சர்வதேசத்தின் நேரடியான விஜயம், அழுத்தம் மற்றும் நேரடிக் கண்காணிப்பின் ஊடாக தமிழ் மக்களது நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேடி வழங்க வேண்டுமெனத் தெரிவித்துள் ளாா்.

காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் ஏக்கங்களுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் கண்ணீருடனும் தங்களுடைய தகப்பன், சகோதரர்கள் என உறவுகளை தேடி அலைந்துகொண்டிருக் கையில் ஜனாதிபதியின் கூற்று ஏற்கக்கூடியதாக இல்லை.தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.

அதற்காக நாங்கள் குரல் கொடுத்து வருகின்றோம். இதற்காக ஐக்கிய நாடுகள் சபை அழுத்தத்தினைக் கொடுக்க வேண்டும். எமது உரிமைகள் இன்னும் எம க்கு கிடைக்கப்பெறவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here