சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்.வருகையின் போது, அவருக்கு அதிகளவான பாதுகாப்பு வழங்கப்பட்டது. குறிப்பாக மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும்போதுகூட இவ்வளவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை.
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பிரதமர் ரணில் வளலாய்க்கு வந்தபோதும் இதுபோன்ற பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ஆனால், அவர் தனியாக யாழ்ப்பாணம் வந்தபோது யாழ்.நகரம் உட்பட அவர் செல்லும் வீதிகள் தோறும் அதிக எண்ணிக்கையான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
நீண்ட பெருந்தெருக்களில் கூட கொளுத்தும் வெயிலிலும் காவல்துறையினர் கடமையில் ஈடுபட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. இதைவிட இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படையினரும் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.