அதிகாலை 3 மணி இருக்கும். இந்திய தேசத் தின் தந்தை மகாத்மா காந்தி என் கனவில் தோன்றினார்.
அவரை நேரில் காணாவிட்டாலும் அவரின் தோற்றம் என்றும் எவரும் மறப்பதற்குரிய தல்ல என்பதால், என்னிடம் வந்த காந்தியடி களை இனங்காண்பதில் எனக்குக் கடினம் இருக்கவில்லை.
அதே கதர், உத்தரியத்தால் உடலைப் போர்த்திக் கொண்ட தோற்றம் கண்ட மாத்திரத்தில் காந்தி யடிகள் என்றுரைத்தபடி அவரின் திருவடி களை வணங்கினேன்.
ஐயனே! தங்களைக் காண்பதில் பேருவகை உற்றேன். அதிலும் இன்று உங்களின் பிறந்த தினம். காந்தி ஜெயந்தி என்றாலே இந்திய தேசம் விழாக்கோலம் பூணும். அத்தகைய அருமையான இந்நாளில் என்முன் தாங்கள் தோன்றியமை யாம் செய்த பாக்கியம் என்றேன்.
காந்தி: என் வருகை உனக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் இலங்கையிலும் இந்தியாவிலும் நடக்கின்ற சம்பவங் களால் எனக்குத் திருப்தியில்லை. கவலை தான் உண்டு.
நான்: காந்தி அடிகளே ஏன் அப்படிச் சொல் கிறீர்கள்.
காந்தி: என் அகிம்சைப் போராட்டத்துக்கு வெள் ளையர் மதிப்பளித்தனர். ஆனால் தியாக தீபம் திலீபனின் அகிம்சைப் போராட் டத்தை என் பாரத பூமி மதிக்கத் தவறி யது. இது எனக்கு மிகுந்த வேதçயைத் தந்துள்ளது.
நான்: காந்தியடிகளே! உங்கள் அகிம்சைப் போராட்டத்தை ஆங்கிலேயர்கள் மதித் தார்கள். ஆனால் இந்திய தேசத்தின் ஒரு பிரஜை உங்கள் பொன்னுடலில் துப் பாக்கி ரவைகளைச் செலுத்தி உங்களைக் கொன்றபோதே பாரத பூமி பாவம் செய் யத் தொடங்கிவிட்டதல்லவா?
காந்தி: மகனே! நன்றாகக் கூறினாய். இலங் கைத் தமிழ் மக்களுக்கும் பாரத பூமி பாவம் செய்துவிட்டது.
இலங்கையில் பேரினவாதம் தலைக்கேறி சிறுபான்மைத் தமிழ் மக்களைக் கொன்றொ ழித்தபோது, அதனைத் தடுத்திருக்க வேண்டி யது அண்டைநாடாக இருக்கின்ற இந்தியா வின் தலையாய கடமையாகும்.
எனினும் இந்திய நாடு அதனைச் செய்ய வில்லை. மாறாக வன்னிப் பெருநிலப்பரப்பில் கொடும் யுத்தத்தை நடத்துவதற்குப் பின்ன ணியாக இந்தியாவின் காங்கிரஸ் ஆட்சி யாளர்கள் இருந்ததாக அறிந்தேன். அது எனக்குப் பேரதிர்ச்சியைத் தந்தது.
அதுமட்டுமல்ல இலங்கையில் சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடப்பதற்கு இந்தியா தான் தடையாக இருப்பதாக அறிகிறேன்.
எட்டுக்கோடி தமிழ் மக்களைக் கொண்டு ள்ள தமிழகத்துக்காகவேனும் இந்திய மத்திய அரசு ஈழத் தமிழர்களைக் காப்பாற்றி இருக்க வேண்டும்.
இப்போதுகூட இந்தியப் பிரதமர் மோடி இந்தி யாவை நம்புமாறு கூறுகிறார். நான் கேட்கி றேன் எப்போதாவது ஈழத் தமிழ் மக்கள் இந்தி யாவை நம்பாமல் விட்டதுண்டா?
நீங்கள்தான் இந்தியா உதவும்; இந்தியாவை நம்புங்கள் என்று கூறிக்கூறியே ஈழத் தமிழ் மக்களை வதைத்து வருகின்றீர்கள். அவர் களுக்கு எந்த உரிமையும் கிடைக்காமல் செய் கின்றீர்கள்.
இவ்வாறு கூறியபடி காந்தி தன் கன்னத்தின் ஓரத்தை உத்தரியத்தால் துடைத்துக் கொண்டார்.
காந்தியடிகள் கண்ணீர் விட்டதைப் பொறுக்க முடியாத யான் விக்கித்து ஓ! என்று அழுதேன். அந்த அழுகையில் உறக்கம் கலைந்தது. கண் டது கனவு என்றுணர்ந்தேன்.
(valampuri)