அடிப்படை வசதிகளின்றி பல அசெளகரியங்களை எதிர்நோக்கும் அக்கராயன் பகுதி மக்கள்!

0
406

குடிநீர் உட்பட அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதில் தாம் இன்னும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அக்கராயன் ஹரித்தாஸ் குடியிருப்பு மக்கள் மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதனிடம் தெரிவித்தனர்

பயனாளி ஒருவருக்கு வாழ்வாதார உதவித்திட்டமொன்ரை வழங்கி வைப்பதற்காக ஹரித்தாஸ் குடியிருப்பிற்கு சென்ற மாகாணசபை உறுப்பினர் தவநாதனரை கிராம மக்கள் சந்தித்து தமது குறைபாடுகள் குறித்து தெளிவுபடுத்தினர்.

குறித்த கிராமத்தில் 200 வரையான குடும்பங்கள் வசிக்கின்ற போதிலும் பெரும்பாலான வீதிகள் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் பொதுக்கிணறொன்றும், குழாய்க்கிணறொன்றும் மட்டுமே இருப்பதனால் குடிநீரை பெற்றுக்கொள்வதில் பலத்த சிரமங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.

நாளாந்தம் பாடசாலைக்கு சென்று வருகின்ற மாணவர்கள் வீதி சீரின்மையால் நீண்டகாலமாகவே பலத்த சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் மாகாணசபை உறுப்பினர் தவநாதனிடம் குறிப்பிட்டுள்ளனர்.

சில அமைப்புக்களால் வழங்கப்படுகின்ற வாழ்வாதார உதவிகள் கூட பெரும்பாலானவர்களுக்கு கிடைப்பதில்லை எனவும் ஹரித்தாஸ் குடியிருப்பு மக்கள் தெரிவித்தனர்.

மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்ட மாகாணசபை உறுப்பினர் தவநாதன் குறித்த கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்காக முழு முயற்சிகளை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here