அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி மட்டக்களப்பு, முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

0
161

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி மட்டக்களப்பில் நேற்று (02) செவ்வாய்க்கிழமை கிழக்கு பலக்லைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யுத்தம் முடிவடைந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை சிறையில் அடைத்து வைக்காமல் உடனடியாக விடுதலை செய்யுமாறு இதன் போது வலியுறுத்தினர்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிழக்கு பலக்லைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்திற்கு முன்னாள் நிறுவக மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“யுத்தம் முடிவடைந்த நிலையில் எம்மவர் குற்றவாளியா, அப்பாவி தமிழரை சிறையில் வாடச் செய்வதா நல்லாட்சி, பயங்கரவாத தடைச் சட்டம் தமிழருக்கு எதிரான அடக்குமுறையா? என்பன போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில், நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்
பல்வேறு இடங்களில் வைத்து கைதுசெய்யப்பட்டு அரசியல் கைதிகாளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகள் மிக நீண்டகாலமாக காரணங்கள் கூறப்படாது வழக்குகள் தொடரப்படாது சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்
இவர்கள் பல தடவைகள் உண்ணாவிரதம் இருந்தபோதும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்படாத நிலையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள்  கடந்த சில நாட்களாக உணவு தவிர்ப்பில் குதித்துள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாகவும் நல்லாட்சி அரசு உடனடியாக இவர்களது வழக்குகளை தொடுத்தோ அல்லது புணர்வாழ்வு அழித்தோ அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென கோரி முல்லைத்தீவில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது
நேற்று (02) காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் நீதிமன்றுக்கு அருகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் நடத்தும் கொட்டகைக்கு முன்பாக அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here