வடக்கில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுபடுத்துவது பிரச்சினை அல்லவென்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக மாவீரர் தினமோ அல்லது பிறிதொருதினமோ நடத்தப்படுமானால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவத்தின் 69-வது வருட பூர்த்தியை முன்னிட்டு அநுராதபுரம் ஜயசிறி விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே சிறிலங்கா இராணுவ தளபதி மஹேஸ் சேன நாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
உயிர் நீத்த தமிழ் மக்களுக்கான ஞாபகார்த்த நினைவுகள் அனுஷ்டிக்கப்படுமானால் அது தவறில்லை. எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக அஞ்சலி செலுத்தப்படுமானால் அது குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும். இது தொடர்பில் நாட்டில் முரண்பாடு ஏற்படக்கூடும்.
எனினும் இந்த செயற்பாடானது நாட் டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்ப டுத்தாது என்றும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.