இலங்கையை அண்மித்த வாயு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் மணித்தியாலங்களில் நாட்டில் பல இடங்களில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
மத்திய , ஊவா , சப்ரகமுவ, மேல் , தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை இந்த காலப்பகுதியில் கடும் இடி மின்னல் நிலவக் கூடுமெனவும் இது தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.