முச்சக்கர வண்டியும் மினி பஸ்சும் நேருக்கு நேர்மோதுண்டதில் இருவர் பலியாகியுள்ளனர்.
நெல்லியடியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் வந்த முச்சக்கரவண்டி முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட போது யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற மினிபஸ்சுடன் நேருக்கு நேர் மோதுண்டதில் 14 வயதுடைய சிறுவன் உட்பட உறவினர்களான இருவர் பலியாகியுள்ளனர்.
மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ் விபத்தில் சுன்னாகப் பகுதியினை சேர்ந்த ரவீந்திரன் அஜந்தன் (வயது 14) முருகையா ஜனார்த்தன் (வயது 25) என்ற இருவருமே உயிரிழந்தவர்களாவர்.
மேலும் நித்தியானந்தன் அஜந்தன் (வயது 24) என்பவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நெல்லியடிக்கு மரக்கறி கொண்டு சென்று விட்டு திரும்பும் வழியில் வல்லைவெளி நாவற்காட்டுப் பகுதியிலேயே மேற்படி விபத்து இடம் பெற்றுள்ளது.
மினி பஸ் சாரதியை அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்ததோடு மினி பஸ்டுனையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.