பிரான்சில் இடம்பெற்ற  தேச விடுதலைப் பாடற்போட்டி சங்கொலி – 2018 

0
1114
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு – தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் ஐரோப்பிய ரீதியில் வருடாந்தம் நடாத்தும்  தேச விடுதலைப் பாடற்போட்டி சங்கொலி – 2018 கடந்த (29.09.2018) சனிக்கிழமை LE BLANC MESNIL பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை 11.07.1991 அன்று ஆனையிறவில் இடம்பெற்ற சமரில் வீரச்சாவடைந்த லெப். நிரு அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நடுவர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.
நடுவர்களாக கலாவித்தகர் இசை ஆசிரியர் திருமதி ராஜ் ஜெயந்தி உருத்திரகுமார், நெதர்லாந்து நாட்டில் இருந்து வருகைதந்த இசையமைப்பாளர் இரா.சேகர், சங்கீதகலாவித்தகர், சங்கீதகலாஜோதி, ஆசிரியர் செல்வி நிலானி செல்வராசா ஆகியோர் அரங்கிற்கு அழைக்கப்பட்டு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கலைபண்பாட்டுக்கழகப்பொறுப்பாளர் திரு.கட்சன் அவர்கள் படிவங்களைக் கையளித்துவைத்தார்.
தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின. பாலர் பிரிவு, கீழ்ப் பிரிவு, மத்திய பிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு, அதி அதி மேற்பிரிவு, சிறப்புப் பிரிவு  ஆகிய பிரிவுகளில் போட்டிகள் சிறப்பாக இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் புலம்பெயர் தேசத்தில் சங்கொலி போன்ற நிகழ்வுகள் நடத்தப்படவேண்டியதன் முக்கியத்தவம் குறித்து விளக்கியிருந்தார்.
நிகழ்வில் கடமையாற்றிய நடுவர்களும் அணிசேர் இசைக் கலைஞர்களும் நினைவுக் கேடயம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
சிறப்பு நிகழ்வாக விடுதலையின் வேர்கள் என்னும் சிறப்பு விருது வழங்கப்பட்டு கலைஞர் திரு. குமாரசாமி பரராசா அவர்கள் மதிப்பளிப்புச் செய்யப்பட்டார். குறித்த மதிப்பளித்தலை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு. மகேஸ் அவர்கள் வழங்கியிருந்தார்.
அந்த மதிப்பளித்தலில்,
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் மூலமாக ஆண்டு தோறும் தேச விடுதலைப்பாடற்போட்டி சங்கொலி நிகழ்வில் பிரான்சு மண்ணிலே எமது தாயக விடுதலைக்கு வலுச்சேர்க்கும் வகையில் உரம் சேர்த்தவர்களை விடுதலைக்கு உழைத்தவர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்தையும்  கொண்டு  ‘விடுதலையின் வேர்” என்ற பட்டத்தையும் விருதினையும் வழங்குகின்றோம்.
அந்த வகையில் கடந்த 3 தாசாப்தங்களுக்கு மேலாக கலையால் புலத்தில் வலுச்சேர்த்தவர், சேர்த்தும் வருபவர் இவர். ஒரு நாடக எழுத்தாளர், நடிகர், பாரம்பரிய கூத்து, இசைநாடகங்களை எழுதியும், நடித்தும், அதில் பலரையும் உருவாக்கியவர் இவர். குறும்படங்களில் இவரின் ஈடுபாடு அளப்பரியது.
TTN தொலைக்காட்சிஊடகத்தை நிறுவு வதில் இவரின் பங்கு மிகப்பெரியது. இவருடைய பண்பும் , அன்பும், மற்றவர்களை நேசிக்கும்பாங்கும், புதிய புதிய கலைஞர்களை உருவாக்க வேண்டும் தான் மாத்திரமல்ல  மற்றவர்களும் கலையாலும், சகலதுறையாலும் வளரவேண்டும் என்று உழைத்து வந்தவர். இவர்.
தொழில் நுட்பம் அரிதான காலத்தில் பல பாடல்களை உருவாக்கம் செய்ய உழைத்தவர். இவர் ஒரு இசையமைப்பாளரும் கூட, தோல்வாத்தியம், நரம்பு வாத்தியம், சுரத்தட்டும் இசைக்க வல்லவர் இவர்.
புலம்பெயர்ந்த பிரான்சு தேசத்தில் பிரான்சு மண்ணில்தான் பல கலைஞர்கள் இருக்கின்றார்கள் அவர்களிடம் இருக்கும் தேசப்பற்றும் விடுதலைப்பற்றும், மற்றைய நாடுகளில் இருக்கும் கலைஞர்களுக்கு முன் உதாரணமாக  இருக்கின்றார்கள் என்ற எண்ணக்கருத்திற்கு அமைய இக்கலைஞர்களின் பின்னால் இவரின் பங்கு இன்றுவரை இருந்தே வருகின்றது என்பதை வெளிப்படையாகவும், உறுதிபடவும் இந்நாளில் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இத்தனைக்கும் பின்னால் இந்தக் கலைஞனை தங்கள் கலைக்குருவாக ஏற்றுக்கொண்டவர்கள் மாவீரர் கப்டன் கஐன், லெப். கேணல் நாதனுமாகும். இந்த மாவீரர்களின் காலம் அந்த நாட்களில் மிகவும் காத்திரமாகவே இருந்து வந்துள்ளது. எமது தேசத்தின் விடுதலையின் வெற்றிக்காகவும், பரப்புரைக்காகவும் வீட்டை விட்டு புறப்பட்டு மாதக்கணக்காக பிரான்சு மண்ணைச் சுற்றி வந்ததும் ஐரோப்பிய நாடுகள் தோறும் சென்று விடுதலைக்காக பணியாற்றியதில்  இவரின் பெரும் பங்கு இருந்திருக்கின்றது.
இந்தத் தேசியப்பணியினால் இவரும் இவரின் குடும்பத்தினரும் மிகுந்த பொருளாதார துன்பத்தை அனுபவித்தனர். உயிர் ஆபத்துக்களையும் எதிர் நோக்கிய போதும் எமது மண்ணையும், மாவீரர்களையும், மக்களையும் மனதில் ஏற்று பணியாற்றியவர் இவர். விடுதலைக்காக இவர் ஆற்றிய பணிகள் இன்னும் அதிகம், ஒரு ஆளுமைமிக்க கலைப் பொக்கிசமாகவே இவரைக் நாம் கருதுகின்றோம்.
இப்படிப்பட்ட இவர் காலத்தின் கோலத்தினால் மறைந்தும், அழிந்தும், மறைக்கப்பட்டு கொண்டு எமது பாரம்பரிய தோல் வாத்தியங்களில் ஒன்றான பறை என்னும் வாத்தியத்தை கையில் எடுத்து அதனை மற்றவர்களுக்கும் பயிற்றுவித்து ஏனையவர்களுக்கு முன்மாதிரியாக  தானும் வாசித்து பல கலைஞர்களையும் இன்று உருவாக்கியு ள்ளார். தமிழர்களின் ஓர் இசைக்கருவியாக புல்லாங்குழல் என்று இன்று ஆயு;வுகள் தெரிவித்துள்ள நிலையில் அதையும் குருவின்றி தானாகவே பயின்று வருவதை கண்டு உவகையடைகின்றோம்.
இப்படிப் பல்வேறு ஆற்றுகையும், திறனையும் கொண்ட எமது மூத்த கலைஞர் என்று சொல்வதில் யாருக்கும் மாற்றுக்கருத்திருக்காது என்கின்ற வகையில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் தாயக விடுதலைப்பாடற் போட்டி ‘சங்கொலி” விருதுக்கான நிகழ்வில் உயரிய விருதான ‘விடுதலையின் வேர்” என்ற பட்டத்தை ( பரா என்று அழைக்கப்படும்) திரு. குமாரசாமி பரராசா அவர்களுக்கு 29.09.2018 சனிக்கிழமை வழங்கி மதிப்பளிப்பு செய்கின்றோம்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.பிரான்சில் இடம்பெற்ற  தேச விடுதலைப் பாடற்போட்டி சங்கொலி – 2018 
இம்முறை சங்கொலி 2018 விருதினை செல்வி கோகுலதாஸ் சூர்ஜா அவர்கள் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழுத் தாயகம் எனும் தாரகமந்திரத்துடனும் நிகழ்வுகள் நிறைவுகண்டன.
போட்டி முடிவுகள்
பாலர் பிரிவு
1ஆம் இடம் : ரூபகரன் அஷ்றியா
2ஆம் இடம் : ஜீவராஜா பிரவீன்ராஜா
3ஆம் இடம் : சிறிதரன் அகஸ்திகா
டியூடர் அநிஷா
கீழ்ப்பிரிவு
1ஆம் இடம் : சுரேஸ்வரன் சானுஜா
2ஆம் இடம் : :ஜீவராஜா ப்ரஹாசினி
3ஆம் இடம் : சுரேஸ்குமார் தமிழினி
சிறிதரன் அக்ஷரா
மத்தியபிரிவு
1ஆம் இடம் : சத்தியநாதன் அமலியா
2ஆம் இடம் : ஜீவராஜா ப்ரத்யங்கரா
3ஆம் இடம் : சுரேஸ்குமார் சங்கீதன்
மேற்பிரிவு
1ஆம் இடம் : : நிஷன் ரஞ்சித்குமார் யோனபாக் தேவமிர்தா
2ஆம் இடம் : சிறிதரன் ஆரபி
3ஆம் இடம் : பத்மராஜா கோபிகா
தெய்வேந்திரம் ஹரிஹரணி
அதி மேற்பிரிவு
1ஆம் இடம் : சிறிநாதன் ஆர்த்தி
2ஆம் இடம் : கிருபாகரன் திரிஷா
3ஆம் இடம் : புஷ்பகரன் அஷேயா
அதிஅதி மேற்பிரிவு
1ஆம் இடம் : சிறிநாதன் ஒலிவியா
சிறப்புப் பிரிவு
1ஆம் இடம் : டிலீஸ் ஜெறால்ட் மரியாம்பிள்ளை
2ஆம் இடம் : அ.செல்வராஜா
3ஆம் இடம் : ஜெயதாஸ் மருசீலன்
சங்கொலி 2018 விருதுபெறுபவர்
செல்வி கோகுலதாஸ் சூர்ஜா
( பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு –)
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here