தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

0
876

அநுராதபுரம் சிறைச்சாலையில் 14ஆவது நாளாகவும் 8 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

காலி முகத்திட லில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினர் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இப்போராட்டத்தில் பிக்கு மாணவர்கள் மற்றும் சிங்கள மாணவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதனால் அந்தப் பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here