அகிம்சை வழி போராட்டங்களுக்கு தியாகி திலீபன் முன்னுதாரணம் – வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவிப்பு

0
349
அகிம்சை வழியில் போராடி உயிர் நீத்த திலீபனின் வாழ்க்கை இன்றைய ஜனநாயக, அகிம்சை வழி அரசியல் போராட்டங்களுக்கு ஒரு முன்னோடியாக அமைந்திருக்கின்றது என வடக்கு மாகாண முத லமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் சுற்றுலாக் கண்கா ட்சிகள், கலை கலாசார நிகழ்வு கள் மற்றும் உணவுத் திருவிழா ஆகிய நிகழ்வுகளை நேற்று புதன்கிழமை வைபவ ரீதியாக ஆரம்பி த்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தியாகி திலீபன் 31 வருடங்களு க்கு முன் இந் நாளில் உயிர்  நீத்த காலை நேரம் 10.48 ஐ நினைவு கூர்ந்து இக் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியது.
ஜனநாயக முறையில் அகிம்சை வழியில் போராடி உயிர் நீத்த ஒருவரின் வாழ்க்கை இன்றைய ஜனநாயக, அகிம்சை வழி அரசியல் போராட்டங்களுக்கு ஒரு முன்னோடியாக அமைந்திருந்தது. ஆகவே தான் அவர் நினைவுக்கு மதிப்பளித்து இக் கூட்டத்தைச் சற்று தாமதித்துத் தொடங்குகின்றோம்.நீத்த காலை நேரம் 10.48 ஐ நினைவு கூர்ந்து இக் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியது.
ஜனநாயக முறையில் அகிம்சை வழி யில் போராடி உயிர் நீத்த ஒருவரின் வாழ் க்கை இன்றைய ஜனநாயக, அகிம்சை வழி அரசியல் போராட்டங்களுக்கு ஒரு முன்னோ டியாக அமைந்திருந்தது. ஆகவே தான் அவர் நினைவுக்கு மதிப்பளித்து இக் கூட்டத்தைச் சற்று தாமதித்துத் தொடங்குகின்றோம்.
வட பகுதியின் சுற்றுலா அபிவிருத்தி வளர்ச்சியடையாமைக்கு இப் பகுதியில் இடம் பெற்ற நீண்டகால யுத்தம் ஒரு காரணமாக காட்டப்பட்டுள்ளது.
ஆனால் யுத்தம் நிறைவுக்கு வந்து 9 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியானது மிகவும் மந்தமான கதியில் நகர்வது வருத்தத்திற்கு ரியது.
வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் இங்கு மிகக் கூடிய அளவிலான சுற்றுலா மையங்களும் புராதன சின்னங்களும் வர லாற்றுப் பதிவுகளும் மற்றும் இன்னோர ன்ன பாரம்பரிய கலை கலாசார விழுமிய ங்களும் காணப்படுகின்றன.
அவற்றை முறையாக வரிசைப்படுத்தி எமது புராதன சின்னங்களின் வரலாற்றுப் பதிவுகளை சுற்றுலாப் பயணிகள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.
சரித்திரம் சில இடங்களில் பிறழ்வாக எடு த்துரைத்து வரப்படும் இக்கால கட்டத்தில் எமது பாரம்பரியத்தின் உண்மை நிலையை உலகிற்கு எடுத்துக் காட்டப்படுவது அத்தியா வசியமாகின்றது என முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here