வடக்கு, கிழக்கில் தியாக தீபம் திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்!(காணொளி)

0
623

தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வை யாழ். மாநகர சபை ஏற்பாடு செய்திருந்தது.
திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் பருத்தித்துறையில் அமைந்துள்ள அவரின் நினைவுத்தூபிக்கு முன்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
மலர் மலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.
யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவும் தீலிபனின் நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், பதில் துணைவேந்தர் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த தியாக தீபம் தீலிபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றது.
மற்றுமொரு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட காணாமற்போனோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் நினைவு நிகழ்வு இன்று இடம்பெற்றது.
பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த தியாக தீபம் திலீபனின் 31 ஆவது நினைவேந்தல் மன்னாரில் இன்று இடம்பெற்றது.
இதன்போது திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி, தீபமேற்றி, அஞ்சலி செலுத்தப்பட்டது.
மன்னார் நகர சபை மண்டபத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதேவேளை, கிழக்கு இளைஞர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த திலீபனின் 31 ஆவது நினைவேந்தல் காரைத்தீவில் இன்று இடம்பெற்றது.
காரைத்தீவு ஆற்றங்கரை பிள்ளையார் கோவிலில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
வாகரை பால்சேனை பொது மைதானத்தில் பால்சேனை மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here