தியாகி திலீபனின் 31ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நினைவுகொள்ளப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் ஆனந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது தியாகி திலீபனுக்கு மலர் அஞ்சலியும் ஈகை சுடரேற்றல் நிகழ்வும் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை, இந் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகியது. இந்நிகழ்வு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு தியாகி திலீபன் உயிர் நீத்த நேரமான 10.48 மணிக்கு அஞ்சலி நிகழ்வுடன் நிறைவு பெற்றது. அஞ்சலி நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.