பார்த்தீபனின் தியாகத்தை பாடப்புத்தகத்தில் ஏற்றுங்கள் !

0
419
தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.
எங்கள் மண்ணில் விளைந்த தியாக தீபம் திலீபனின் தியாகத்தை எவரும் தன்னலமாக் காமல் அனுஷ்டிப்பது உலகம் வாழ் தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்.
தமிழ் மக்களின் வாழ்வுக்காக பன்னிரு நாட்கள் நீராகாரம் இன்றி உண்ணாநோன் பிருந்து உயிர்விட்ட அந்தத் தியாகம் மனித மொழிகளால் விதந்துரைக்கப்படக்கூடியதன்று.
இந்திய தேசத்தின் விடுதலைக்காக சத்தி யாக்கிரகம் இருந்த மகாத்மா காந்தி அகிம் சைக்கு அடியயடுத்துக் கொடுத்தார் என்றால்,
அகிம்சையின் உச்சத்தைத் தொட்ட உன்ன தம் எங்கள் தியாகி திலீபனையே சாரும்.
பாரத பூமியின் தந்தை மகாத்மா காந்தி இறந்தபோது சீன நாட்டு அறிஞன் ஒருவன் கூறினான்; மகாத்மா காந்தி என்று ஒருவர் இந்த உலகில் இருந்திருக்க முடியுமா என்று எதிர்கால மக்கள் சமூகம் கேட்கும் என்று.
இவ்வாறு அந்த சீன அறிஞன் சொல்வதற் குக் காரணம் மகாத்மா காந்தி நாற்பது நாள் மேற்கொண்ட உப்புச்சத்தியாக்கிரகமாகும்.
அதே அறிஞன் உயிரோடு இருந்திருந்தால், எங்கள் பார்த்தீபனின் தியாகத்தை கண்டிருந் தால், திலீபன் என்ற தியாகியைபோல் முன்பும் எவரும் இருக்கவில்லை. இனியும் எவரும் இருக்கப்போவதில்லை என்று நிச்சயம் சாச னம் எழுதி வைத்திருப்பார்.
ஆம், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தியாகி திலீபன் மேற்கொண்ட உண்ணாவிரதத்தின் வரலாறு பாட நூலாக்கப்பட வேண்டும்.
இந்தத் தியாகம் தமிழ் மண்ணில் நடந்தது என்பதற்காக இதனை இந்த நாட்டு ஆட்சி யாளர்கள் புறக்கணிப்பார்களாக இருந்தால், அவர்கள் சிங்கள மக்களுக்கும் இந்த நாட்டுக் கும் மிகப்பெரும் தவறை இழைக்கிறார்கள் என்றே கூறவேண்டும்.
தியாகி திலீபனின் தியாகத்தை இந்த நாட் டின் வருங்கால சந்ததி கற்றறிவது கட்டாய மானது.
இன்று தியாகி திலீபனின் தியாகத்தை தமிழ் மக்கள் போற்றித் துதிப்பதுபோல, என்றோ ஒரு காலத்தில் தியாகி திலீபனின் தியாகத்தை இந்த உலகம் முழுவதும் பெருமையுடன் பேசிக் கொள்ளும்.
அந்தத் தியாகத்தின் உன்னதத்தை வரலா றாக எழுத உலகம் முன்வரும்.
இதுமட்டுமல்ல மகாத்மா காந்தியின் உரு வச்சிலையை பிரிட்டன் தன் நாட்டில் நிறுவி காந்தியின் அகிம்சையைக் காட்டி, தன் நாட்டு மக்களுக்கு அகிம்சையின் வலிமையை எடுத்து ரைக்க முற்பட்டதோ,
அதுபோல, தியாகி திலீபனின் தியாகத்தை இந்த உலகம் தன் மக்கள் சமூகத்துக்காக அகிம்சை போதனையாக அங்கீகரிக்கும். இது நிச்சயம் நடக்கும்.
ஆகையால் இப்போதே பார்த்தீபனின் தியா கத்தை எம் பாடப் புத்தகத்தில் பதிப்பது அவசிய மாகும்.
(வலம்புரி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here