அவுஸ்திரேலியாவின ஸ்ட்ராபெர்ரி இறக்குமதியை நிறுத்தியது நியூசிலாந்து !

0
816


அவுஸ்திரேலியாவின் 6 மாநிலங்களிலிருந்து strawberries விளைவிக்கப்பட்டு, நாடு முழுவதும் அனுப்பப்படுகின்றன. சமீபத்தில் கடைகளில் வாங்கிய strawberries இல் உலோக ஊசி இருப்பதாக ஏராளமானவர்கள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து பழங்களை ஆய்வு செய்திருக்கிறார்கள். பெரும்பாலான பழங்களில் ஊசிகள் வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. முதலில் இந்தப் பிரச்சினை Queensland இல் தான் ஆரம்பித்திருக்கிறது. பின்பு ; நாடு முழுவதும் பரவிவிட்டது.
இந்த செயலைச் செய்தவர்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஸ்ட்ராபெர்ரிகளை வாங்குபவர்கள் அப்படியே சாப்பிடாமல், வெட்டிய பிறகு சாப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
Queensland இல் 24 வயது இளைஞர் ஒருவர் strawberries இல் இருந்த ஊசியைக் கவனிக்காமல் விழுங்கிவிட்டார். வயிற்றில் வலி வந்த பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் மூலமே strawberries புகார் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏராளமான புகார்கள் அவுஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வர ஆரம்பித்தன. எவ்வளவோ முயற்சி செய்தும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தால் யார் செய்கிறார்கள், எதற்காகச் செய்கிறார்கள் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் இப்படிப்பட்ட மோசமான செயலைச் செய்பவர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 51 லட்சம் ரூபாய் பரிசாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவுஸ்திரேலியாவிலிருந்து அதிக அளவில் ஸ்ட்ராபெர்ரியை இறக்குமதி செய்யும் நியூசிலாந்து வாங்குவதை நிறுத்திவிட்டது.
இந்தச் செயலால் விவசாயிகள், வியாபாரிகள், மக்கள் என்று பல தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here