வைத்தியசாலை சென்ற 5 பிள்ளைகளின் தாயைக் காணவில்லை!

0
341

கிளிநொச்சி இராமநானத் கமம், மருதநகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
46 வயதான ஐந்து பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு காணமல் போயுள்ளதாக கணவர் நேற்று (22) கிளிநாச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சுகவீனம் காரணமாக, கடந்த 13 ஆம் திகதி வீட்டிலிருந்து வைத்தியசாலைக்கு சென்று திரும்புவதாக தெரிவித்துச் சென்ற குறித்த குடும்பப் பெண் வீடு திரும்பவில்லை என, கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த பெண்ணை தமது உவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடிய போதிலும் இன்று வரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என, பெண்ணின் கணவர் தெரிவிக்கின்றார்.

தனது மனைவி தொடர்பான தவல்கள் கிடைக்குமிடத்து தந்துதவுமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் கிளிநாச்சி பொலிசாரும் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
மருதநகர் பகுதியை சேர்ந்த மஞ்சுளா என அழைக்கப்படும் நாகராசா முனியம்மா என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இவர் தொடர்பான தகவல்கள் கிடைக்குமிடத்து அவரின் கணவரான இராசதுரை நாகராசா என்பவரை 0776753485 எனும் தொலைபேசி இலக்கதுடன் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here