மனித வாழ்வில் இதய சுத்தி, மனத் தூய்மை என்பன மிகவும் முக்கியமானவை.
அதிலும் பொதுச்சேவை என்ற விடயத்தில் இதய சுத்தி மிகவும் அவசியமானது.
எனினும் இன்றைய யதார்த்த சூழ்நிலை யில், நாம் சந்திக்கின்ற இடமெங்கிலும் சுய நலனும் சொந்த வாழ்வும் மட்டுமே எழுகை பெற்றுள்ளதைக் காணமுடியும்.
இதனாலேயே,
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக் கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் உள் ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்…
என இராமலிங்க வள்ளலார் பாடினார்.
ஆக, இதயசுத்தியுடன் கூடிய சேவை எல் லோரிடமும் இருக்காவிடினும் ஒரு குறிப்பிட்ட பகுதியினரிடமாவது நேர்மை, நீதி, நியாயம் என்பன இருப்பது அவசியமாகும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்கள் அரசி யல் புலத்தில் எங்களை விற்று தங்களின் சீவியம் நடத்துகின்ற அரசியல்வாதிகளே நமக் குக் கிடைத்துள்ளனர்.
மாறாக ஒரு சிலர் இத்தகைய வஞ்சகத் தனத்தை முறியடித்து தமிழ் இனம் வாழ்வதற் காக குரல் கொடுத்ததால், சம்பந்தப்பட்டவருக் குச் சொல்லொணாத் துன்பங்களைக் கொடு த்து அவர்களை தமிழ் மக்கள் மத்தியில் இரு ந்து எப்படியும் வெளியேற்றிவிட வேண்டுமென நினைக்கின்ற கயமைத்தனங்கள் போதுமென்றாயிற்று.
தாங்கள் வாழவேண்டும் தங்களுக்கே பதவி வேண்டும் என்பதற்காக; யார் யாரெல்லாம் தங்களுக்கு உடன்பாடில்லாமல் இருக்கிறார் களோ அவர்களுக்கு எப்படியும் அநீதி இழைக்க வேண்டும் எனப் பாடுபடுகின்றவர்களைப் பார்க் கும்போது ஒன்பதே ஆண்டுகளுக்குள் இப்படி யயாரு நரிக் கூட்டம் நம் மத்தியில் இருந்ததா என்று எண்ணத்தோன்றும்.
ஓ! இறைவா! தன் இனம் வாழவேண்டும் என்பதற்காக பெற்ற தாயை, தந்தையை, சகோ தரர்களை விட்டுவிட்டு தங்களை ஆகுதியாக் கிய பல்லாயிரக்கணக்கான இளவல்கள் பிற ந்து வளர்ந்து தியாகத்தை விளைவித்த இந்த மண்ணில் இப்படியயாரு நிலைமையா என்று நினைத்துப் பார்க்க முடியாத அளவில் நிலைமை ஆகிவிட்டது.
பரவாயில்லை என்று விட்டால் தியாகத் தைக்கூட விற்றுப் பிழைக்குமளவில் நாங்கள் சின்னத்தனமாகிவிட்டோம் எனும்போதுதான் நெஞ்சம் கருகிப் போகிறது.
(Valampuri)