சாவகச்சேரியில் கத்திமுனையில் சுமார் 18 இலட்சம் ரூபாய் கொள்ளை; தனி ஒருவர் துணிகரம்!

0
217

சாவகச்சேரி நகர் ஏ9 நெடுஞ் சாலையிலுள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றுக்குள் கத்தியுடன் புகுந்த கொள்ளையர் ஒருவர், பணியாளரை அச்சுறுத்தி சுமார் 18 இலட்சம் ரூபாயை கொள்ளையிட் டுத் தப்பித்துள்ளார். இந்தச் சம்ப வம் நேற்றுக் காலை 8.30 மணி யளவில் இடம்பெற்றது.

நேற்றுக் காலை வழமைபோல நிதி நிறு வனத்தை திறந்த பணியாளர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த 18 இலட்சத்து 91 ஆயிரத்து 21 ரூபாய் பணத்தினை வங்கியில்
வைப்பிலிடுவதற்காக எடுத்துள்ளனர்.

இதன்போது கத்தியோடு உள்நுழைந்த கொள்ளையர் ஒருவர், அங்கிருந்தோரை அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here