தென்மராட்சி, மீசாலை மடத்தடி பகுதியில் டிப்பர் வாகனமும் உந்துருளியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்று
பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றது.
சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த இளைஞன் தலையில் படுகாயமடைந்த நிலையில் சுயநினைவின்றி மீட்கப்பட்டு சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்தார் என்று மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீசாலை வடக்கு சாவகச்சேரியைச் சேர்ந்த நவநீதராசா வரதன் (வயது 23) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.
அவர் பயணித்த உந்துருளி கடுமையாக சேதமடைந்த நிலையில் டிப்பரின் முன்பகுதியில் புகுந்துள்ளது.
சம்பவம் தொடர் பாக தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.