வடமராட்சியில் அத்துமீறிய சிங்கள மீனவர் சிறைப்பிடிப்பு. சிறீலங்கா காவல்துறை வன்முறைப் பிரயோகம்!

0
544


தமிழர் கடல்ப் பகுதியில் சிங்களமீனவர்களின் அத்து மீறல்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
பருத்தித்துறை – சற்கோட்டை பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடச் சென்ற சிங்கள மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டதுடன், அவர்களின் மூன்று படகுகளும் தடுத்து வைக்கப்பட்டன.
இதனையடுத்து பருத்தித்துறை, நெல்லியடி, அச்சுவேலி சிறீலங்கா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். அத்துடன், பிரதேச செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளும் சற்கோட்டை பகுதிக்கு சென்றிருந்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வட மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்டடோரும் அங்கு சென்று மீனவர்களுடன் கலந்துரையாடினர்.
தமது கோரிக்கைக்கு தீர்வு வழங்கப்படும் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க முடியாது என உள்ளூர் மீனவர்கள் தெரிவித்தனர்.
இதன்பேது சிறீலங்கா காவல்துறையினர் சிங்கள மீனவர்களை விடுதலை செய்யாவிட்டால் தாம் வன்முறையைப் பிரயோகிப்போம் என்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப் போவதாகவும் எச்சரித்தனர். தமது கோரிக்கை நிறைவேறும் வரை அத்து மீறிய சிங்கள மீனவர்களை விடுவிக்க முடியது என்றும் தாம் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்த நிலையில் சிறீலங்கா காவல்துறையினர் மீனவர்மீது வன்முறையைப் பிரயோகித்து சிங்கள மீனவர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.
இவ்விதம் அத்து மீறும் சிங்கள மீனவர்களுக்கு எதிராக குரல் கொடுத்த மீனவர்களின் வாடிகளும், படகுகளும் அண்மையில் எரியூட்டப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here