போர்க்குற்ற விசாரணைக்கு முன் பீல்ட் மார்ஷல் பதவி வழங்கலாமா? – வலம்புரி!

0
132

sarath-fonsekaமுன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் எனும் இராணுவ அதி உயர்பதவி வழங்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்­வின் ஆட்சியில் தமிழர்களுக்கு எதிராக வன்னியில் பெரும் போர் நடத்தி அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்றொழிக்கும் மிகப்பெரும் சங்காரம் இடம்பெற்றபோது இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கே பீல்ட் மார்ஷல் என்ற அதிஉயர் விருது வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட்டது எதற்காக என்று கேட்டால், வன்னியில் நடந்தது தெரியாதா? அதற்காகத்தான் வழங்கப்பட்டது என்று பதில் கிடைக்கும்.

அது சரி, மகிந்த ராஜபக்­வின் ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்ட சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்புக் கொடுத்து அவர் இழந்த பதவி, பட்டம் என அனைத்தையும் மீள வழங்கியதோடு நிற்கக் கூடாதா?

பீல்ட் மார்ஷ­ல் என்ற பதவியை அவருக்குக் கட்டாயம் வழங்கத்தான் வேண்டுமா? அவ்வாறு அந்தப் பதவியை அவருக்கு வழங்கியதன் மூலம் தமிழர்களுக்கு நடந்த அத்தனை கொடூரமும் நியாயமானது என்பதாகக் கதை முடிக்கப்பட்டுள்ளது.

ஆக, வன்னிப் போரை நடத்திய எங்கள் நாட்டுத் தளபதிக்கு பீல்ட் மார்­ல் என்ற பதவியைக் கொடுத்து நாங்கள் கெளரவிக்கும் போது, நீங்கள் போர்க்குற்ற விசாரணை நடத்துவது எந்தளவு தூரம் நியாயமானது?

ஆகையால் சர்வதேச விசாரணை என்பதற்கு ஒரு போதும் நாம் இடமளிக்க மாட்டோம். உள்ளக விசாரணை மட்டுமே இடம்பெறும் என்று மைத்திரி அரசு கூறும்.
சரி, உள்ளக விசாரணை நியாயமாக நடக்கும். அதை நம்பலாம் என்று ஜனாதிபதி மைத்திரி கூறினால்,

ஐயா! பிரபு, உள்ளக விசாரணை நியாயமாக நடக்கும் என்றால் உள்ளக விசாரணை முடிவடைந்து விசாரணை அறிக்கையின் நிலைமையை அறிந்த பின்பல்லவா முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்­ல் என்ற பதவியை வழங்கியிருக்கவேண்டும்?

உள்ளக விசாரணையில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா குற்றம் இழைத்தார் என்பது தெரியவந்தால் இப்போது வழங்கப்பட்ட பீல்ட் மார்­ல் பதவியை மீளப் பெறுவதா?

ஆக, உள்ளக விசாரணை ஒரு கண்துடைப்பு. அதில் மகிந்த ராஜபக்­வோ அல்லது சரத் பொன்சேகாவோ எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. போரில் தமிழ் மக்கள் இறக்கவுமில்லை என்பதாகவே விசாரணையின் முடிவு அமைக்கப்படும் என்ற தன் அடிப்படையிலேயே சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்­ல் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அட! மைத்திரிபால சிறிசேனவை தமிழர்கள் ஜனாதிபதியாக்கிவிட, அவர் செய்த முதல் வேலை சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு வழங்கியமையாகும். இப்போது பீல்ட் மார்­ல் பதவியும் கொடுத்துள்ளார்.

என்ன செய்வது? தமிழர்கள் யாரை நம்பினாலும் அவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களாக இருப்பது எதற்கு என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here