அநுராதபுரம் சிறைச்சாலையில் 8 தமிழ் கைதிகள் உண்ணாவிரதம்

0
329

அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் கைதிகள் 8 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை முதல் 8 கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறீலங்கா சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
இறுதியுத்தத்தின் பின்னர் கடந்த 9 வருடங்களாக தண்டனை அனுபவித்து வரும் தம்மை விடுவிக்குமாறு கோரியே அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தம் மீதான வழக்கு விசாரணைகள் திட்டமிட்டு காலம் தாழ்த்தப்படுவதாகவும் கைதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தம்மை விடுவிப்பதற்கான வழக்கு விசாரணைகளில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படின், குறுகிய கால புனர்வாழ்வளித்து விடுவிக்குமாறும் தமிழ் கைதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சிறீலங்கா அரசு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறீலங்கா சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here