கிளிநொச்சி சட்டவிரோத மண்ணகழ்வை நீதிமன்றம் பார்வை!

0
454

சட்டவிரோதமாக மண்ணகழ்வு மேற்கொள்ளப்படும் பகுதிகளை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சட்டவிரேத மணல் அகழ்வு மேற்கொள்ளப்படும் பிரதேசங்களை பொலிசார் சகிதம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதிவாளர் குழுவினர் சென்று பார்வையிட்டுள்ளனர்.

கிளிநொச்சி வட்டக்கச்சி, பன்னங்கண்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத மண்ணகழ்வு தொடர்பில் இன்று (14) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் பதிவாளர் தலைமையிலான குழுவினர்  நேரில் சென்று பார்வையிட்டனர்.

குறித்த பகுதியில் சட்டத்திற்கு முறணான வகையில் மண் அகழப்படும் சம்பவம் தொடர்பில் பொலிசாரால் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று பதிவு செய்யப்பட்டது.

குறித்த வழக்கை விசாரணைக்கு எடு்துக்கொண்ட மன்று அந்தப் பகுதியை நேரடியாக சென்று  பார்வையிட்டு விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு இன்று (14) பகல், கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதிவாளர் சிவபாளினி சண்முகராஜ் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.

இதன்போது அந்தப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதமாக அகழப்பட்டு குவிக்கப்பட்டிருந்த மண் மேடுகளை அக்குழுவினர் அடையாளமிட்டனர்.

குறித்த பகுதியில் ஆங்காங்கே பெருந்தொகை மணல் திட்டுக்கள் உருவாக்கப்பட்டமை தொடர்பில் பார்வையிட்ட குறித்த குழுவினர் சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கையினை தாயாரித்துள்ளமை குறிப்பிடதக்கது.

குறித்த பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வினால் தென்னை பனை உள்ளிட்ட மரங்கள் அழிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமையை காணக்கூடியதாக இருந்தது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here