தியாகி லெப்.கேணல் திலீபனின் 31-வது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் இன்று 15-ம் திகதி இடம்பெறவுள்ளது.
தியாகி திலீபனின் நினைவு நாட்கள் நடைபெறும் இக் காலங்களில் களியாட்டங்களைத் தவிர்த்து திலீபனின் நினைவுகளை சுமந்து உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளையும் வேண்டி நிற்கின்றோம்.
ஒடுக்கப்பட்ட ஓர் தேசிய இனத்தின் அரசியல் பொருளாதார சமூக விடு தலையினை நேசித்து அதற்கு வலுச்சேர்த்து எம் இனத்தின் நியாயப்பாடான அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரம் கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து நல்லூர் வீதியில் வளர்ந்த வேள்வித்தீயில் மூச்சடங்கிப்போனவன் எங்கள் தியாகி திலீபன்.
இற்றைவரை திலீபனின் ஒற்றைக்கோரி க்கை கூட நிறைவேறாத நிலையில் துன்ப த்தின் நீட்சியில் தமிழினம் இடர்படும் இச் சூழலில் தியாகி திலீபன் அவர்களின் 31வது ஆரம்ப நினைவேந்தல் நிகழ்வுகள்
இன்று காலை 10.10 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் இடம்பெற இருக்கின்றது.
திலீபன் அவர்களது நினைவுநாட்கள் நடைபெறும் இக்காலங்களில் உறவுகள் களியாட்டங்களை தவிர்த்து திலீபனின் நினைவுகளைச்சுமந்து உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்குமாறு தாயக மற்றும் புலம்பெயர் உறவுகவுகளுக்கு கேட்கப்பட்டுள்ளது.
திலீபன் எங்களோடு இல்லாமல் இருக்கலாம் திலீபனின் கனவு இன்னமும் சுவாசித்துக்கொண்டுதான் இருக்கிறது.
புலம்பெயர் தேசங்களிலும் தியாகி திலீபனின் நினைவு வணக்க நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
லெப்.கேணல் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக பரிசின் புறநகர் பகுதியான ஆர்ஜன்தை பகுதியில் தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் இன்று (15.09.2018)காலை 10.00 மணிக்கு வணக்க நிகழ்வு இடம் பெறவுள்ளது.