வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் மின் சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந் துள்ளார். இச்சம்பவம் நேற்றுக் காலை இடம் பெற்றுள்ளது. இதில் அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நிதர்சன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர் பில் தெரியவருவதாவது,
நேற்றுக் காலை அவரது வீட்டு கிணற்றை மின் இயந்திரம் மூலம் துளையிட்டு கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் குறித்த இளைஞர் பாதிப்படைந்த நிலையில் உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பரிசோதனைகளை மேற்கொண்ட வைத்தியர்கள் ஏற்கெனவே அவர் உயிரிழந் துவிட்டதாக தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசார ணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொ ண்டு வருகின்றனர்.