யாழ். காங்கேசன்துறை புகை யிரத நிலையத்துக்கு அருகாமையில் மர்மமான முறையில் உயிரி ழந்த ஆணுடைய மனித எலும்புக்கூடு ஒன்று நேற்று மீட்கப்பட்டு ள்ளது.
குறித்த எலும்புக்கூடு இரண்டு மாதங்க ளுக்கு உட்பட்ட காலத்தில் உயிரிழந்த ஆணுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
காங்கேசன்துறை புகையிரத நிலையத் தில் இருந்து சற்று தொலைவில் புகையிரத ஊழியர்களுக்கான தங்குமிட விடுதி அமைந்துள்ளது. குறித்த விடுதியை சுற்றியுள்ள பகு தியில் நேற்று துப்புரவு பணிகள் இடம் பெற் றுள்ளன.
அப்போது 50 மீற்றர் தொலைவில் உள்ள பற்றைக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்த நபர்கள் அங்கு சென்று பார்த்து ள்ளனர்.
அங்கு ஓர் எலும்புக்கூடு இருப்பதை அவ தானித்துள்ளனர். உடனடியாக காங்கேசன் துறை பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து அந்த இடத்துக்கு வந்த பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
எலும்புக்கூட்டை சுற்றி ஆணினுடைய ஆடைகள் காணப்பட்டுள்ளது. அதற்கு சற்று தொலைவில் பிஸ்கட் மைலோ பைக்கற் காணப்பட்டுள்ளது. தடயப்பொருட்களை பொலிஸார் அடையாளப்படுத்தியிருந்தனர்.
பிற்பகல் மல்லாகம் நீதிமன்ற பதில் நீத வான் ஏ.ஆனந்தராஜா மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி யு.மயூரதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
இந்த எலும்புக்கூடு தொடர்பில் உடற் கூற்று பரிசோதனைக்கு நீதவான் உத்தர விட்டதுடன் சடலம் தொடர்பில் மேலதிக விசா ரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.