தமிழீழம் மலரும் – ஐநா நோக்கி பயணிக்கும் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் ஈருருளிப்பயண மனிதநேயர்கள்!

0
501

இன்று காலை Starsbourg மாநிலத்தில் இருந்து ஆரம்பித்து Sélestat நோக்கி விரைந்தது. Sélestat மாநகரசபை உதவி முதல்வர் ஈருருளிப்பயண மனிதநேயர்களை வரவேற்று, அவர்களுடன் உரையாடியதோடு sélestat மாநிலத்தின் வரலாற்றை எளிதாக விளக்கும் வகையில் வரையப்பட்ட ஆவணப்பதிவை ஈருருளிப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்து மதிப்பளித்தார். அதனைத் தொடர்ந்து மனிதநேய ஈருருளிப்பயணம் Colmar மாநகரசபையை நோக்கி சென்றது.

அத்தோடு colmar மாநகர சபை முதல்வரின் வரவேற்போடு “DNA” எனும் ஊடகமும் எமது நீதிக்கான மனிதநேய பயணத்தினையும் , இலங்கை பேரினவாத அரசு நடத்திய இனவழிப்பினையும் கவனத்தில் கொண்டு பதிவாக்கி பிரசுரித்தனர். தொடர்ச்சியாக meyenheim மாநிலத்தில் இன்று மாவீரரின் மீதும் தேசியத்தலைவரின் மீதும் உறுதி எடுத்து இன்றைய பொங்குதமிழ் மனிதநேய ஈருருளிப்பயணம் இனிதே நிறைவு பெற்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here