சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நிலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வருமாக இருந்தால் நாடாளுமன்ற விதிகளின் அடிப்படையில் அதைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
தற்போது ஜக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்துள்ள நிலையில் எதிர்கட்சித் தலைவராக இருந்த நிமால் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலையை இழந்துள்ளார். இந்த நிலையில் மைத்திரியையும், ரணிலையும் ஆட்சி பீடம் ஏற்றிய சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவரை வழங்கி அழகு பார்க்க மைத்திரியும், ரணிலும் முனைவதாக வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில ஆகியோர் தங்களது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
எதிர்ப்பை வெளியிடும் இவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் நிமால் சிறிபால டி சில்வா அப்பதவியை யாரும் விட்டுக் கொடுக்க முடியாது என்றும் நானே எதிர்க்கட்சித் தலைவர் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிடைத்தால் அதனை பரிசீலிகத் தயார் என்று சம்பந்தன் கூறியுள்ளார். இதேநரம் இப்பதவியை வேறு ஒருவருக்கு வழங்கினாலும் அதனை எதிர்க்கப்போவதில்லை என அவர் தொிவித்துள்ளார். அவ்வாறான ஒரு நிலை வருமாக இருந்தால் கட்சி கூடி முடி எடுக்கும் என சம்மந்தன் கருத்து வெளியிட்டுள்ளார்.
எதுவாக இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி முடிவெடுக்கும் என்று சம்மந்தன் கூறுவது வெற்று வார்த்தையே. எந்த ஒரு சூழலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிளுடன் கலந்து பேசி ஒரு முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்து வருவதில்லை. குறிப்பாக சம்மந்தனின் மற்றும் சுமந்திரனின் முடிவுகளே திணிக்கப்படுகின்றது. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் உட்கட்சி சனநாகயம் இல்லை என பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஏற்கனவே கருத்து வெளியிட்டுள்ளார்.