சம்­பந்­த­னுக்கு எதிர்க்­கட்சி தலை­மைப்­ப­தவி போக வேண்­டு­மெனின் அதை தடுக்க முடி­யாது : சம்­பிக்க ரண­வக்க

0
170

champika_ranawaka_02ஆளும் கட்சி மற்றும் எதிர்க்­கட்சி ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்­கத்­தினை அமைத்­தி­ருப்­பதால் அர­சாங்கம் மற்றும் எதிர்க்­கட்சி என இரண்­டு தரப்புக்களும் ஒன்றாக இருக்க முடி­யாது. பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யினை நிய­மிக்க வேண்டியது அவசியமாகும் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரிவித்தார்.

பாரா­ளு­மன்ற விதி­மு­றைப்­படி கூட்டமைப்பின் தலைவர் சம்­பந்­த­னுக்கு எதிர்க்­கட்சி தலை­மைப்­ப­தவி போக வேண்­டு­மெனின் அதை தடுக்க முடி­யாது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்­கட்சி தலைவர் யார் என்ற கேள்வி தற்­போது எழுந்­துள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்­சி­யாக வாய்ப்பு உள்­ளதா என வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது

ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்றின் எதிர்க்­கட்­சி­யா­கவும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு ஆளும் தரப்­பா­கவுமே கடந்த காலங்­களில் செயற்­பட்டு வந்­தன. எனினும் தற்­போது ஏற்­பட்­டி­ருக்கும் தேசிய அர­சாங்­கத்தின் மூலம் எதிர்க்­கட்­சி­யினர் யார் என்ற சந்­தேகம் எழுந்­துள்­ளது. யார் எதிர்க்­கட்சி என்­ப­தற்கு தேசிய அரசில் விடை கிடைப்­பது கடி­ன­மா­னதே. இரு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்தே தேசிய அர­சாங்­கத்தை அமைத்துள்ளன.

தேசிய அரசு கலைக்­கப்­பட்­ட­வுடன் மீண்டும் இரு கட்­சி­களில் ஒன்று ஆளும் தரப்­பா­கவும் எதிர்க்­கட்­சி­யா­கவும் அமைந்து விடும். ஆனாலும் செயற்பட்டுக் கொண்­டி­ருக்கும் தேசிய அரசின் ஆட்­சி­யிலும் பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்­கட்­சி­யொன்று அவ­சி­ய­மா­னதே.

தற்­போது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஒன்­றி­ணைந்­தி­ருப்­பதால் பாரா­ளு­மன்றில் இவை இரு கட்­சி­க­ளுமே ஆளும் தரப்­பா­கவே நோக்கப்படுகின்றன. எனவே அடுத்த பெரும்­பான்மை கட்­சிக்கு பாரா­ளு­மன்றின் எதிர்க்­கட்சி பதவி வழங்­கப்­பட வேண்டும். அதற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தகு­தி­யெனின் பாரா­ளு­மன்ற விதி­மு­றை­க­ளுக்கு அமைய சம்­பந்­த­னுக்கு எதிர்க்­கட்சி பதவி வழங்­கப்­பட வேண்­டு­மாயின் அதனை யாராலும் தடுக்­கவோ அல்­லது எதிர்ப்பு தெரி­விக்­கவோ முடி­யாது.

நாட்டில் ஜனநாயகம் நிலை நாட்ட வேண்டுமெனின் அல்லது சகல மக்களுக்கும் உரிமைகள் சம அளவில் வழங்கப்படுவதெனின் தமிழ் சிங்கள பேதமின்றி உரிமைகள் பகிரப்படுவதே நியாயமானது எனவும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here