கொழும்பில் மனித உடற்பாகங்கள் மீட்பு: பொதுமக்களின் உதவியை நாடும் சிறிலங்கா காவல்துறை!

0
198

human-body-partsகொழும்பில் பல்வேறு பகுதிகளிலிருந்து கண்டெடுக்கப்பட்ட உடற்பாகங்கள் குறித்து டி.என்.ஏ. பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கென பொதுமக்களின் உதவியை சிறிலங்கா காவல்துறை தலைமையகம் கோரியுள்ளது.

உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட தினங்களுக்கு முன்னைய வாரங்களில் எவரேனும் காணாமற் போயிருப்பின் உடனடியாக 011-2320145 என்ற தொலை பேசி இலக்கத்தின் ஊடாக குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறிவிக்குமாறு சிறிலங்கா காவல்துறை தலைமையகம் கேட்டுக்கொண்டு ள்ளது.

கொழும்பில் தியவன்ன ஒய மற்றும் மிரிஹான, தெமட்டகொடை, வெலிகடை பகுதி களிலிருந்து இடது கையில்லாத உடல் மற்றும் கை, கால் இல்லாத உடல், கை கள், கால்கள் என உடற்பாகங்கள் மீட்கப்பட்டன. இவை தொடர்பாக விசாரணைகளை குற்றத்தடுப்பு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் களுபோவில ஆஸ்பத்திரியிலும் இவை வைக்கப் பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட உடல்கள் தொடர்பில் மரண விசாரணைகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக நீதிமன்ற உத்தரவின்படி களுபோவிலவிலுள்ள உடலையும் தேசிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய ஆஸ்பத்திரியில் மரண விசாரணைகள் முடிவுற்றதும் நீதிமன்ற உத்தரவுக்கமைய டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்படும். அண்மையில் எவரும் காணா மல் போயுள்ளதாக எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் பதிவாகி யிருக்கவில்லை. எனவே எவரேனும் காணாமற் போயிருப் பின் உடனடியாக அறியத்தருமாறும் சிறிலங்கா காவல்துறை கேட்டுள்ளது.

இவ்வாறு கிடைக்கும் முறைப்பாட்டின் படி முறைப்பாட்டாளரின் டி.என்.ஏ.யுடன் உடற் பாகங்களிலிருந்து பெறப்பட்ட டி.என்.ஏ.வை ஒப்பிட்டு பார்த்து இறந்தவர் யார் என்பதை கண்டறிய முடியும் என்றும் சிறிலங்கா காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித் துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here