மக்களுடன் தொடர்ந்தும் நான் இருப்பேன்!- முதலமைச்சர் விக்னேஸ்வரன் உறுதி!

0
169

எனக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட போது ஆயிரக்கணக்கில் வெகுண்டு திரண்ட எம் மக்களுக்கு அவர்களுடன் நான் இருப்பேன் என கூறியிருந்தேன். என் வாக்கைக் காப்பாற்ற நான் முனைந்துள்ளேன். இறைவன் வழிவிட்டால் நான் அவர்களுடன் இருப்பேன் என முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் வெளியிட்ட நான்கு தெரிவுகளில் நான்காவதாக குறிப்பிட்ட தெரிவே மிகச் சிறந்தது என்று தெரிவித்துள்ளார்.
சிலோன் ருடே ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் தம்மிடம் நான்கு தெரிவுகள் இருப்பதாக கூறியிருந் தமை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள் ளது.
அதற்கு அவர், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு நியமனம் வழங்காவிடின், நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்று ஊடக வியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதுதான், நான்கு தெரிவுகளை கூறியிருந்தார்.
முதலாவது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது.
இரண்டாவது, இன்னொரு அரசியல் கட்சியில் இணைந்து கொள்வது.
மூன்றாவது, புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பது.
நான்காவது, எமது அரசியல் நோக்கங் களை அடைவதற்கு பாகுபாடு இல்லாத தமிழ் மக்கள் பேரவை போன்ற சமூக இயக்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்குவது என்று குறிப்பிட்டிருந்தார்.
இதில் உங்களுக்குச் சிறந்தது எது என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, நிச்சயமாக நான்காவது தெரிவு தான் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here