உந்துருளிகளில் செல்பவர்கள் முழு மையாக முகத்தை மூட க்கூடிய (full face) தலைக்கவசம் அணிவது எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் முற்றாக தடைசெய்யப்படுவதாக சிறிலங்கா காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
அத்துடன் முகத்தை மறைக்கக்கூடிய தலைக்கவசத்தில் பொருத்தப்படும் ‘வைசர்’ கண்ணாடி போன்ற பிளாஸ்டிக் திரையும் முகம் தெரியக்கூடியவாறு மிகத் தெளிவாக இருக்க வேண்டும். 25 மீட்டருக்கு அப்பால் மோட்டார் சைக்கிளோட்டியும் பின்னால் அமர்ந்திருப்பவரதும் முகம் தெளிவாக தெரிய வேண்டும்.
சிறிலங்கா காவல்துறை மா அதிபர், அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்தாலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணரட்ன தெரிவித்தார். எதிர்வரும் 2 ஆம் திகதிக்கு பின்னர் (full face) தலைக்கவசம் அணிந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் 500 ரூபா உடனடி அபராதம் விதிக்கப் படும்.
தலைக்கவசம் அணியும் போது முகம் தெளிவாக தெரிய வேண்டும் என்பதுடன் முகத்தை மூடுவதற்காக தலைக்கவசத்துடன் பொருத்தப்பட்டுள்ள ‘வைசர்’ பிளாஸ்டிக் திரையும் கண்ணாடி போன்று தெளிவாக இருக்க வேண்டும். கருப்பு நிறத்திலோ அல்லது வேறு வர்ணத்திலோ இருக்கக் கூடாது என்றும் சிறிலங்கா காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.